உள்ளூர் நேரப்படி செப்டம்பர் 15ஆம் நாள் முதல் 17ஆம் நாள் வரை, பப்புவா நியூ கினி அரசின் அழைப்புக்கிணங்க, சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் சிறப்புத் தூதரும் சீன உயிரின வாழ்க்கை மற்றும் சுற்றுச் சூழல் துறை அமைச்சருமான குவாங் ரென்ச்சியூ, அந்நாட்டின் தலைநகருக்குச் சென்று, பப்புவா நியூ கினி நிறுவப்பட்ட 50ஆவது ஆண்டு நிறைவுக்கான கொண்டாட்டத்தில் பங்கெடுத்தார். இப்பயணத்தின் போது குவாங் ரென்ச்சியூ அந்நாட்டின் தலைமை ஆளுநர், தலைமையமைச்சர் ஆகியோரையும் சந்தித்துரையாடினார்.
சீன- பப்புவா நியூ கினி தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 49ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, இரு நாடுகளின் தலைவர்களின் நெடுநோக்குத் தலைமையில், இரு தரப்பும் பல்துறை சார்ந்து ஒத்துழைத்து அதிகமானச் சாதனைகளைப் படைத்துள்ளன. அடுத்தாண்டு, இரு தரப்பு தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 50ஆவது ஆண்டு நிறைவாகும். இதன் மூலம், இரு தரப்புறவை புதிய உயர் நிலைக்குத் தூண்ட வேண்டும் என்று குவாங் ரென்ச்சியூ தெரிவித்தார்