பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) அமோக வெற்றி பெற்ற நிலையில், மீண்டும் ஒரு புதிய NDA அரசாங்கம் அமைப்பதற்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இது குறித்த இந்தியா டுடே வெளியிட்ட செய்தியின் படி, பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் இன்று காலை தனது இறுதிக் அமைச்சரவைக் கூட்டத்திற்குத் தலைமை தாங்குகிறார்.
அந்தக் கூட்டத்தில், அமைச்சரவையைக் கலைப்பது தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, நிதிஷ் குமார் பதவி விலக ஆளுநர் ஆரிப் முகமது கானிடம் பரிந்துரைக்கப்படுவார்.
தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பிறகு, நிதிஷ் குமார் ஆளுநரைச் சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை சமர்ப்பிப்பார்.
பின்னர் புதிய அரசை பதவியேற்க ஆளுநர் அழைப்பு விடுப்பார்.
பீகாரில் NDA கூட்டணி அரசு வியாழக்கிழமை பதவியேற்கும்!
