தென்காசி மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 7ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் பிரசித்திபெற்ற கோயில் திருவிழாக்கள் முக்கியமான ஒன்று திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோயில் சங்கரநாராயணர் ஆலய ஆடி தபசு விழா. ஆடிதபசு விழா என்பது புராண கால பெருமை மிக்கது .அதுமட்டுமல்ல சைவ வைஷ்ணவ தூவேஷத்தையும் சிவன் – விஷ்ணு இருவரில் யார் பெரியவர் என்ற அவசியமற்ற சர்ச்சைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கவும் விரும்பியனாள் அம்பிகை. அவரது வேண்டுகோளை ஏற்று சிவபெருமான் அளித்த காட்சியின் சாட்சியாக நடைபெறுவது தான் ஆடிதபசு விழா. அண்ணன் நாராயணரும் கணவர் சங்கரரும் அதாவது ஹரியும் சிவனும் ஒருவரே என்பதே உலகிற்கு உணர்த்த அம்பிகை மேற்கொண்ட தவத்திற்கு அதாவது தபசுக்கு பலன் கிடைத்த நாள் ஒரு ஆடி பௌர்ணமி தினத்தில் தான். அதுவே ஆதிகாலத்தில் இருந்து ஆடி தபசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இதனையடுத்து தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கர நாராயணர் கோயில் ஆடித்தபசு விழாவை ஒட்டி வரும் 7ம் தேதி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை ஈடு செய்யும் விதமாக வரும் 23ம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது