அமெரிக்காவின் அவதூறு குறித்து சீன தேசிய பாதுகாப்பு அமைச்சகத்தின் எதிர்ப்பு

மே 31ஆம் நாள் ஷங்கரீல பேச்சுவார்த்தையில், சீனாவின் மீது அமெரிக்காவின் அவதூறு குறித்து சீன தேசிய பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்திதொடர்பாளர் சாங் சியாவ்கங் கூறுகையில்,

அமெரிக்க தேசிய பாதுகாப்பு அமைச்சரின் அவதூறு, ஆழமான மேலாதிக்கவாத சிந்தனையைக் கொள்கின்றது.  சீனாவின் உரிமைக்கு ஆத்திரமூட்டும் இந்த அவதூறு, சீனாவின் கோட்பாட்டைத் திரித்துப்புரட்டி, இப்பிரதேசத்திலுள்ள நாடுகள் அமைதியான வளர்ச்சியை நனவாக்கும் விருப்பத்தை அலட்சியம் செய்தது என்றார்.

ஆசிய-பசிபிக் பிரதேசத்தின் அமைதி வளர்ச்சியைப் பேணிக்காப்பவராகவும் கட்டியமைப்பவராகவும் சீனா எப்போதுமே திகழ்கின்றது. மனித பொது சமூகம் மற்றும் 3 உலக முன்மொழிவுகளை சீனா நடைமுறைப்படுத்தி, ஆசிய-பசிபிக் பிரதேசத்தின் நிதானத்தையும் செழுமையையும் பேணிக்காக்கும் என்று அவர் தெரிவித்தார்.

You May Also Like

More From Author