வார இராசிப்பலன் ( 02-06-2025 முதல் 08-06-2025 வரை)

மேஷம்

இராசி நாதன் செவ்வாய் நீச்ச நிலையில் இருந்து தன்னுடைய நட்பு வீடான சிம்மத்திற்கு இந்த வாரத்தில் சஞ்சரிப்பதால் பல நாட்களாக தடைபட்ட காரியங்கள் இனிதே நிறைவேர இருக்கும் அருமையான வாரம். இராசியில் சுக்கிரன் சஞ்சரிப்பது தன்னம்பிக்கை ஆரோக்கியம் மற்றும் தெளிந்த சிந்தனைகள் இருக்கும் வாரமாக அமையும்..  குடும்பத்தில் மகிழ்ச்சியும் தன வரவு நன்றாக இருக்கக்கூடிய  நல்ல வாரம்.

ரிஷபம்

இராசி நாதன் சுக்கிரன் இராசிக்கு 12 ல் சஞ்சரிப்பதால் 12ம் இடம் சுபத்துவமாகி வெளியூர் வெளிநாடு போன்ற ப்ரயாணங்கள் அமையும் வாய்ப்புக்கள் உள்ளன. தனாதிபதி புதன் இராசிக்கு 2ல் குருவுடன் இணைவதால் குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும், தன வரவு இருக்கும். 7 க்கும் 12 க்கும் அதிபதியான செவ்வாய் சிம்மத்திற்கு செல்லவிருப்பதால் வீட்டில் மங்கள நிகழ்ச்சிகள் திருமண நிகழ்ச்சிகள் நடைபெற உள்ள ஒரு நல்ல வாரம். தாயாரின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை, பிள்ளைகளால் செலவுகள் இருக்கும், நண்பர்களால் ஆதரவு மகிழ்ச்சி ஏற்படும்.

மிதுனம்

இராசி நாதன் புதன் இராசியில் குருவுடன் இணைய இருக்கும் அற்புதமான வாரம். எடுத்த காரியத்தில் வெற்றி, சிந்தனையில் தெளிவு ஆரோக்கியத்தில் மேன்மை ஏற்படும் நல்ல வாரம்.  செவ்வாய் கேதுவுடன் இணைவதால் திடீர் அதிர்ஷ்டங்கள் பயணங்கள் இருக்கும் வாரமாக அமையும். இளைய சகோதர சகோதிரியினால் செலவுகள் ஏற்படலாம். எடுத்த காரியங்கள் தடையில்லாமல் இனிதாக நிறைவேற இருக்கும் நல்ல வாரம், அவ்வப்பொழுது மனக்கவலைகள் ஏற்படலாம்.    

கடகம் :

இராசி நாதன் சந்திரன் செவ்வாயுடன் இணைவது நல்ல யோகம், சுப நிகழ்ச்சிகள் ஏற்பட சாதகமான வாரம். முயற்சிகளில் சற்று தடை தாமதங்கள் காணப்படலாம், ஆரோக்கியத்தில் சிறு சிறு உபாதைகள் ஏற்படலாம். குடும்பத்தில் செலவுகள் அதிகம் காணப்படலாம், தாயாருடன் கருத்து வேறுபாடு ஏற்படலாம், பிள்ளைகளால் செலவுகள் ஏற்படலாம்.

சிம்மம்

இராசி நாதன் சூரியன் 10 ம் இடத்தில் சஞ்சரிப்பதால் தொழிலில் நல்ல முன்னேற்றம் இலாபம் ஏற்படலாம். தனஸ்தானாதிபதி புதன் குருவுடன் இணைவதால் பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் குடும்பத்தில் நல்ல மகிழ்ச்சி ஏற்படலாம். சந்திரனும் செவ்வாயும் இராசியில் இணைவது நல்ல யோகம், வீட்டில் சுப நிகழ்ச்சிகள் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை, பெண்களால் இலாபம் ஏற்படலாம்.

கன்னி :

இரசி நாதன் குருவுடன் இணைய இருப்பது நல்ல அமைப்பு, தொழிலில் நல்ல முன்னேற்றம் இலாபம் ஏற்படலாம், பாக்கியாதிபதி சுக்கிரன் வாரத்தின் பிற்பகுதியில் ஆட்சி பெருவதால் தடைபட்ட காரியங்கள் எல்லாம் நிறைவேற இருக்கும் நல்ல வாரம்.. குடும்பத்தில் செலவுகள் கூடும் வாரம்.  கணவர் மனைவி ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. , ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இரு்க்கும்.

துலாம்

இராசி நாதன் சுக்கிரன் இராசிக்கு 7 ம் இடத்தில் சஞ்சரிப்பதால் திருமண வயதில் உள்ளவர்களுக்கு வரன் அமைவதில் இந்த வாரம் தாமதம் ஏற்படலாம். கூட்டுத் தொழிலில் நல்ல மேன்மை ஏற்படும். நண்பர்களால் மகிழ்ச்சி உணரடாகும் வாரம். இரண்டாம் அதிபதியான செவ்வாய் சிம்ம இராசிக்கு வருவது பண வரவிற்கு ஏதுவாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும் வாரம். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைப்பெற சாதகமான வாரம். தொழிலில் நல்ல இலாபம் உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சம்பள உயர்வு போன்றவை அமையலாம். .  

விருச்சிகம் :

இராசி நாதன் செவ்வாய் நீச்ச வீட்டில் இருந்து தனது நட்பு வீடான சிம்மத்திற்கு செல்ல இருப்பதால் தொழிலில் நல்ல இலாபம் ஏற்படலாம், ஆரோக்கியத்தில் நல்ல மேன்மை ஏற்படும், தன்னம்பிக்கை நிறைந்த வாரமாக அமையும். தனாதிபதி குரு 9ல் இருப்பதால் நல்ல பண வரவு நிறைந்த வாரம், குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். எடுத்த காரியம் கைக்கூடி  வரும். . பெண்களால் ஆதாயம் ஆதரவு ஏற்படலாம். வாரத்தின் பிற்பகுதியில் செலவுகள் சற்று அதகப்பட வாய்ப்புக்கள் உள்ளன.

தனுசு :

இராசி நாதன் குரு பகவான் இராசிக்கு 7 ம் இடத்தில் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் கணவர் மனவு உறவுகள் மேம்பட்டு இருக்கும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். தாயின் ஆதரவு கிடைக்கும். தாயாரின் ஆரோக்கியம் மேம்படும். பஞ்சமாதிபதி செவ்வாய் சிம்மத்திற்கு செல்ல இருப்பதால் குல தெய்வம் ஆதரவு கிடைக்கும், குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். கணவர் மனைவி உறவு மேன்மையாக இருக்கும். வெளியூர் பயணங்களால் சிறு மன கஷ்டங்கள் ஏற்படலாம். வாரத்தின் பற் பகுதி தொழிலில் நல்ல முன்னேற்றம் இலாபம் பண வரவு ஏற்படும் நல்ல வாரமாக இருக்கும்.

மகரம் :

இராசி நாதன் மூன்றாம் இடத்தில் சஞ்சரிப்பதால் முயற்சிகள் கைகூடும், ஜீவன விஷயத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். வண்டி வாகனங்கள் சம்பந்தமான செலவுகள் இருக்கலாம்,  தாயிடம் கருத்து வேறுபாடு ஏற்படலாம். வண்டி வாகனங்களில் பயணிக்கும் போது கவனம் தேவை. வாரத்தின் முற்பகுதி சந்திரன் 8ல் சஞ்சரிப்பதால் அலைச்சல் மனக் குழப்பம் மன சஞ்சலங்கள் முடிவெடுப்பதில் சிக்கல்கள் ஏற்படலாம். வார இறுதியில் எடுத்த காரியங்கள் வெற்றிகரமாக முடிய வாய்ப்புக்கள் உள்ளன.

கும்பம் :

பாக்கியாதிபதி சுக்கிரன் வார இறுதியில் ஆட்சி வீட்டில் சஞ்சரிக்க இருப்பதால் எடுத்த காரியங்கள்,  தடைபட்ட காரியங்கள் இனிதே நிறைவேற வாய்ப்புக்கள் உள்ளன. வண்டி வீடு வாங்குவதற்கான முயற்சிகள் நற்பலனைத்தரும். இளைய சகோதர சகோதிரியினால் ஆதாயம் ஆதரவு கிடைக்கும். தொழில் நன்றாக இருக்கும். கலைத்துறையில் உள்ளவர்களுக்கு முயற்சிகள் நல்ல பலனைத் தரும். வாரத்தின் இடைப்பகுதியில் மன சஞ்சலங்கள் மன குழப்பங்கள் முடிவெடுப்பதில் சிக்கல் தாமதம் ஏற்படலாம். வெளியூர் பயணங்கள் ஏற்படலாம்.

மீனம் :

இராசியில் சனி பகவான் சஞ்சரிப்பதால் மன கவலைகள் மன அழுத்தம் ஏற்படலாம். பழைய கடன்கள் முடிக்க சாதகமான வாரம். ஆரோக்பியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நல்ல மேன்மை ஏற்படும் வாரமாக அமையும். பெண்களால் ஆதரவு மகிழ்ச்சி உண்டாகும் வாரம். தனாதிபதியும் பாக்கியாதிபதியுமான செவ்வாய் சிம்மத்திற்கு செல்ல இருப்பதால் நல்ல பண வரவு தடைபட்ட காரியம் நிறைவேறுதல் போன்ற சாதகமான பலன்கள் அமையும் நல்ல ஙாரமாக இருக்கும். வார இறுதியில் மன சஞ்சலங்கள் புதிய முயற்சிகளில் தடை தாமதம் முடிவெடுப்பதில் குழப்பம் போன்றவை நிகழலாம். முயற்சிகள் நிறைவேறும் நல்ல வாரம்.

சுபம் !!!

தென்னேட்டி சுப்பராமன் ஶ்ரீராம்

9566620842 / 9944443215

astromanibharathy@gmail.com

 

 

 

 

 

 

Please follow and like us:

You May Also Like

More From Author