செயற்கை நுண்ணறிவு துறையில் உலக புகழ்பெற்ற ஓபன்ஏஐ நிறுவனம், பயனர்களின் உடல்நலனை பாதுகாப்பதற்கும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை மேம்படுத்துவதற்கும் ‘ChatGPT Health’ என்ற புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தப் புதிய வசதியின் மூலம் பயனர்கள் தங்களின் மருத்துவப் பரிசோதனை அறிக்கைகள் மற்றும் உடற்பயிற்சி செயலிகளை சாட்ஜிபிடியுடன் பாதுகாப்பாக இணைக்க முடியும்.
பொதுவான மருத்துவக் குறிப்புகளை வழங்காமல், பயனரின் தனிப்பட்ட உடல்நிலை மற்றும் மருத்துவ வரலாற்றைக் கருத்தில் கொண்டு, அவர்களுக்குத் தேவையான பிரத்யேக ஆலோசனைகளை இந்த AI வழங்கும்.
உதாரணமாக, ஒருவரின் முந்தைய மருத்துவப் பதிவுகளின் அடிப்படையில் அவருக்கு ஏற்ற உணவு முறைகள் அல்லது உடற்பயிற்சிகளை இது பரிந்துரைக்கும்.
‘ChatGPT Health’ வசதியை அறிமுகம் செய்தது ஓபன்ஏஐ
