33வது ஏபெக் உச்சிமாநாடு, 2026ம் ஆண்டின் நவம்பர் திங்கள் குவாங் டுங் மாநிலத்தின் ஷென் ச்சேன் நகரில் நடைபெறுவதாக சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் நவம்பர் முதல் நாள் அறிவித்தார்.
ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பு, இப்பிராந்தியத்தின் மிக முக்கிய பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பு முறையாகும். ஆசிய-பசிபிக் பிராந்திய வளர்ச்சி மற்றும் செழுமை முன்னெடுப்புக்கு இவ்வமைப்பு முக்கிய பங்கு ஆற்றியுள்ளது. 2026ம் ஆண்டில் சீனா, 3வது முறையாக, இவ்வமைப்பின் தலைமை பொறுப்பு நாட்டுப் பதவியை ஏற்கவுள்ளது. இதனை வாய்ப்பாகக் கொண்டு, பல்வேறு தரப்புகளுடன் இணைந்து ஆசிய-பசிபிக் பொது சமூகத்தை உருவாக்க சீனா விரும்புகிறது என்று தெரிவித்தார்.
ஷென் ச்சேன் நகர், பசிபிக் பெருங்கடல் கரையில் அமைந்துள்ளது. சீனா, ஒன்றுக்கொன்று நலன் தந்து, கூட்டு வெற்றி பெறுவதன் திறப்புக் கொள்கையைப் பின்பற்றி வரும் முக்கிய ஜன்னலாக ஷென் ச்சேன் விளங்குகிறது. அடுத்த ஆண்டில் ஷென் ச்சேனில் ஆசிய-பசிபிக் வளர்ச்சி குறித்து பல்வேறு தரப்புகளுடன் ஆலோசித்து, இப்பிராந்தியத்தின் அருமையான எதிர்காலத்தைக் கூட்டாக உருவாக்க வேண்டும் என்றும் ஷிச்சின்பிங் குறிப்பிட்டார்.
படம்:VCG
