திமுக தர முன்வந்துள்ள 25 இடங்கள் போதாது என காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், “தொகுதி விருப்பப் பட்டியலை திமுகவிடம் வழங்கியிருக்கிறோம், திமுக 25 சீட்கள் வழங்கினால் ஏற்றுக்கொள்ள முடியாது.
சட்டப்பேரவைத் தேர்தலில் கூடுதல் சீட்களை கேட்டிருக்கிறோம், மாநிலங்களவை சீட்டையும் கேட்டு பெறுவோம். நாங்கள் சமர்பித்த விருப்பப்பட்டியலை திமுக ஏற்றுக்கொள்ளும் என நம்புகிறோம். நாங்கள் என்ன விரும்புகிறோமோ, அதனை திமுக தேர்தல் குழுவிடம் கொடுத்துள்ளோம்.
திமுக தர முன்வந்துள்ள 25 இடங்கள் போதாது. காங்கிரஸ் பலத்தையும் ராகுல்காந்தியையும் தவெக அங்கீகரித்து வருகிறது. தவெகவை குறைத்து மதிப்பிட முடியாது. இளைஞர்களிடையே தமிழக வெற்றிக்கழகம் ஈர்ப்பை பெற்றுவருகிறது” என்றார்.
