அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையேயான போர் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ள நிலையில், ஈரானிய தலைமையை தகர்க்கும் பிரம்மாண்டமான ராணுவ தாக்குதலை நடத்துவதற்கு முன்பாக, அந்நாட்டிற்கு ஒரு “கடைசி வாய்ப்பு” வழங்குவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளை மாளிகையில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
திங்கள்கிழமை ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் டிரம்ப், ஈரானுடன் இரு கட்டப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.
முதற்கட்டமாக, உலகளாவிய கச்சா எண்ணெய் போக்குவரத்துக்கு மிக முக்கிய காரணியாகத் திகழும் ஹார்முஸ் நீரிணையை உடனடியாக திறப்பது குறித்தும், இரண்டாவது கட்டமாக ஈரானின் அணுசக்தி திட்டங்களை முழுமையாக முடக்குவது குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை: ஈரானுக்கு ‘கடைசி வாய்ப்பு’ என அறிவிப்பு
