ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையைத் தொடர்ந்து இந்தியாவின் ராஜதந்திர திட்டத்தின் ஒரு பகுதியாக அனைத்து கட்சி குழுக்கள் பல நாடுகள் உலக நாடுகளுக்கு பயணப்பட்டுள்ளது.
அதில் ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளுக்கு அனைத்துக் கட்சிக் குழுவை வழிநடத்திச் சென்றுள்ளார் திமுக எம்பி கனிமொழி.
இந்தக் குழுவில் சமாஜ்வாதி கட்சி எம்பி ராஜீவ் குமார் ராய், பாஜகவின் பிரிஜேஷ் சவுதா, ஆம் ஆத்மியின் அசோக் மிட்டல், ஆர்ஜேடியின் பிரேம் சந்த் குப்தா மற்றும் முன்னாள் தூதர் மஞ்சீவ் சிங் பூரி ஆகியோர் உள்ளனர்
அப்போது ஸ்பெயினில் அவரிடம், இந்தியாவின் தேசிய மொழி குறித்து கேட்கப்பட்டது.
இந்தியாவின் தேசிய மொழி ‘வேற்றுமையில் ஒற்றுமை’ என்று பதிலளித்த கனிமொழியின் இந்த பதில் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்தியாவின் தேசிய மொழி என்ன என்று கேட்டவருக்கு கனிமொழி அளித்த நச் பதில்!
