கால்சியம் நிறைந்த உணவு என்றாலே நம் கண் முன் வருவது, பால் பொருட்கள் தான். ஆனால் பால் அல்லாத சில பொருட்களிலும் கால்சியம் ஊட்டச்சத்து நிறைந்துள்ளன.
அப்படிப்பட்ட பொருட்களை இப்போது பார்க்கலாம்.
கருமையான இலைகளை கொண்ட கீரைகள்
முட்டைக்கோஸ், காலார்ட் கீரைகள் மற்றும் போக் சோய் போன்ற கருமையான இலைகளை கொண்ட கீரைகளில் ஊட்டச்சத்துகள் அதிகம் உள்ளன.
இதுபோன்ற கீரைகள் கால்சியத்தின் சிறந்த ஆதாரங்களாக உள்ளன. இதுபோன்ற கீரைகளை கொஞ்சம் உட்கொண்டாலே அவை தினசரி தேவைகளை பூர்த்தி செய்கின்றன.
தாவரத்தில் இருந்து எடுக்கப்படும் பால் வகைகள்
பாதாம், சோயா, ஓட் போன்ற தாவரத்தில் இருந்து எடுக்கப்படம் பால் வகைகளில், பசும் பாலில் இருக்கும் கால்சியத்தின் அளவை விட அதிக கால்சியம் உள்ளது.