பிரபஞ்சத்தில் பூமிக்கு வெளியேயும் உயிரினங்கள் வாழ்வதற்கான உகந்த சூழல் கொண்ட புதிய உலகங்களைத் தேடி வரும் வானியலாளர்கள், தற்பொழுது ஒரு மிகப்பெரிய கண்டுபிடிப்பை நிகழ்த்தியுள்ளனர்.
நமது சூரிய குடும்பத்திற்கு மிக அருகில், அதாவது வெறும் 25 ஒளி ஆண்டுகள் தொலைவில், மனிதர்கள் மற்றும் வேற்றுலக உயிரினங்கள் வாழத் தகுதியுள்ள ஒரு புதிய ‘சூப்பர்-எர்த்’ கிரகத்தை விஞ்ஞானிகள் அதிகாரப்பூர்வமாகக் கண்டறிந்துள்ளனர்.
GJ 3378b எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய கிரகம், விண்வெளி ஆராய்ச்சியில் ஒரு புதிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.
பூமிக்கு அருகில் புதிய ‘சூப்பர்-எர்த்’: 25 ஒளி ஆண்டுகள் தொலைவில் உயிரினங்கள் வாழக்கூடிய புதிய கிரகம் கண்டுபிடிப்பு
