புள்ளிவிவரங்களின்படி, 2022ஆம் ஆண்டு, சீனாவில் பேறுகாலத் தாய்மார்களின் இறப்பு விகிதம் ஒரு இலட்சத்துக்கு 15.7க்குக் கீழ் இறங்கியுள்ளது. அதைப் போல், சிசுக்கள் மற்றும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதம் முறையே ஆயிரத்துக்கு 4.9 மற்றும் ஆயிரத்துக்கு 6.8ஆகக் குறைந்துள்ளது. இவை வரலாற்றுப் பதிவில் மிகத் தாழ்ந்த நிலையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
உலக சுகாதார அமைப்பு மக்களின் சராசரி ஆயுட்காலம், சிசு இறப்பு விகிதம், பேறுகாலத் தாய்மார்கள் இறப்பு விகிதம் ஆகியவற்றை ஒரு நாட்டில் மக்களின் உடல் நல தரத்தை மதிப்பிடும் முக்கிய குறியீடாகப் பயன்படுத்துகின்றது. இவற்றில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் உடல் நல நிலைமை, ஒரு நாட்டில் மக்களின் சுகாதாரம், வாழ்க்கை தரம் மற்றும் நாகரிகப் பண்பை வெளிப்படுத்தும் முக்கிய அம்சங்களாகப் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.