சீன வணிக அமைச்சர் வாங் வென்டொவ் தனது பிரான்ஸ் பயணத்தின்போது ஐரோப்பிய ஆணையத்தின் வர்த்தக மற்றும் பொருளாதாரப் பாதுகாப்பு அதிகாரி செஃப்கோவிக்குடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இது குறித்து சீன வணிக அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் ஒருவர் 7ஆம் நாள் கூறுகையில், சீன மின்சார வாகனங்களுக்கான மானிய எதிர்ப்பு குறித்த விசாரணை, ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் பிராந்திகள் குவிப்பு விற்பனை எதிர்ப்பு குறித்த விசாரணை, ஏற்றுமதிக்கான கட்டுப்பாடு உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து இரு தரப்பினரும் விவாதம் நடத்தினர் என்று தெரிவித்தார்.
மேலும் அவர், அரிய வகை தனிமங்களின் ஏற்றுமதி தொடர்பாக கூறுகையில், அரிய வகை தனிமங்களுக்கு ஏற்றுமதி கட்டுபாடுகளை விதிப்பது, சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறையாகும். ஐரோப்பிய ஒன்றியத்தின் கவனத்துக்கு சீனா மிகுந்த முக்கியத்துவம் அளிக்கின்றது. தகுதி வாய்ந்த பயன்பாடுகளுக்கு பசுமை வழியை உருவாக்கவும், அனுமதி பெறுவதை துரிதப்படுத்தவும் சீனா விரும்புகின்றது என்று தெரிவித்தார்.