சீன-மொனாக்கோ தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 30-ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், ஜனவரி 16-ஆம் நாள், மொனாக்கோ இளவரசர் ஆல்பர்ட் Ⅱ ஆகிய இருவரும் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டனர்.
இரு தரப்புறவு கடந்த 30 ஆண்டுகளாக சீராக வளர்ச்சி அடைந்து வந்துள்ளது. வேறுபட்ட வரலாறு, பண்பாடு, சமூக அமைப்பு கொண்ட நாடுகளுக்கிடையில் நட்புறவு, கூட்டு வளர்ச்சி ஆகியவற்றை நனவாக்குவதற்கு முன்மாதிரியாக இது விளங்குகிறது என்று ஷிச்சின்பிங் தெரிவித்தார்.
இரு தரப்புறவின் வளர்ச்சியில், மொனாக்கோ மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது. சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் அவர்களுடன் இணைந்து, இரு தரப்புறவுகளில் மேலதிகமான சாதனைகளைப் படைக்க வேண்டும் என்று இளவரசர் ஆல்பர்ட் Ⅱ விருப்பம் தெரிவித்தார்.