தென் சீனக் கடலில் பிலிப்பைன்ஸின் தந்திரம்

சிங்கப்பூரில் அண்மையில் நடைபெற்ற 2025ஆம் ஆண்டுக்கான ஷாங்க்ரி-லா உரையாடல் நிறைவடைந்தது. இதில், தென் சீனக் கடல் விவகாரத்தில் பலவீனமாகவும் பரிதாபகரமாகவும் இருப்பது போல பிலிப்பைன்ஸ் நடித்து, சீனா பற்றி அவதூறு பரப்பியது.

முதலில், சிறிய நாடு தான் நீதி என்ற கருத்தை வலியுறுத்தியதோடு, குற்ற உணர்வு ரீதியாக பெரிய நாட்டுக்கு அழுத்தம் அளிக்க பிலிப்பைன்ஸ் முயன்று வருகின்றது. தென் சீனக் கடல் தொடர்பாக பிலிப்பைன்ஷுக்கு விட்டுக்கொடுக்கும் “இயற்கையான கடமை” சீனாவுக்கு உண்டு என்று மறைமுகமாக வலியுறுத்தியது. சர்வதேச சட்டங்களை மையமாக கொண்ட சர்வதேச விதி முறைகளில் வலியுறுத்தப்பட்ட நியாயம் என்ற கோட்பாடு புறக்கணிக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது, சரியையும் தவறையும் குழப்புதல், பகைமையை உருவாக்குதல் ஆகியவற்றில் பிலிப்பைன்ஸ் தொடர்ந்து ஈடுபட்டுவருகின்றது. தென் சீனக் கடலில் நியாயமற்ற நலன்களைப் பெற பிலிப்பைன்ஸ் எடுத்த நடவடிக்கைகளை சரியானதாகவும், தேசிய நலன்களை பாதுகாக்க சீனாவின் நடவடிக்கைகளை தீமையாகவும் சொல்லி, பிலிப்பைன்ஸ் சர்வதேச சமூகத்துக்கு தவறான தகவலைப் பரப்பி வருகின்றது.

தவறான மற்றும் கள்ளத்தனமான வழிநடத்துதல் மூலம் சர்வதேச சமூகத்தின் இரக்கத்தை பெறவும், தென் சீனக் கடலில் சீனா சட்டப்பூர்வமான உரிமைகளைக் கட்டுப்படுத்தவும் வேண்டும் என்பது, பிலிப்பைன்ஸின் திட்டம்.

சீனாவுக்கும் பிலிப்பைன்ஸுக்கும் இடையேயான கடல் விவகாரப் பிரச்சினையில், சிறிய நாடு மற்றும் பெரிய நாடு என்று இல்லை, சரி மற்றும் தவறு என்ற கருத்தை தான் பார்க்க வேண்டும்.

 

You May Also Like

More From Author