மதுரை ஒத்தக்கடை பகுதியில் அமித்ஷா தலைமையிலான பாஜகவின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் தொடங்கியது.
பாஜக மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகளை சந்திப்பதற்காக டெல்லியில் தனி விமானம் மூலம் மதுரை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இன்று பிற்பகல் சிந்தாமணி சுற்றுச்சாலையில் உள்ள தனியார் விடுதியில் தமிழக பாஜக உயர்மட்ட குழு உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்தினார். அதனைத் தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பாஜக மாநில தலைவர் நைனார் மகேந்திரன், அண்ணாமலை, வானதி சீனிவாசன், தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் பாஜக நிர்வாகிகள் ஒத்தக்கடையில் நடைபெற உள்ள தென்மாவட்ட பாஜக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள புறப்பட்டுச் சென்றனர்.
பாஜகவின் மாநில மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் மதுரை ஒத்தகடை பகுதியில் உள்ள மைதானத்தில் அமித்ஷா தலைமையில் மாலை 4 மணி அளவில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதில் பாஜகவின் நிர்வாகிகள் அடையாள அட்டையுடன் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள். மத்திய இணையமைச்சர் எ.முருகன், அண்னாமலை ஆகியோர் பேசி வருய்கின்றனர். கூட்டம் முடிந்தவுடன் இரவு சுமார் 7 மணியளவில் தனி விமானம் முலம் டெல்லி செல்கிறார்.
