சென்னையில் நடைபெற்று வரும் ஜி.கே.மூப்பனார் நினைவு நாள் நிகழ்ச்சியில் ஈ.பி.எஸ் மற்றும் அண்ணாமலை ஒன்றாக இணைந்து பங்கேற்றனர்.
த.மா.கா நிறுவனர் மூப்பனாரின் 24வது நினைவு தினத்தையொட்டி, அவரது நினைவிடத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அதிமுக பொதுச்செயலாளர் ஈ.பி.எஸ், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து சென்னையில் நடைபெறும் மூப்பனார் நினைவு தின நிகழ்ச்சியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆகிய இருவரும் ஓரே மேடையில் கலந்துகொண்டனர்.
முன்னதாக மேடைக்கு வந்த அண்ணாமலைக்கு, எடப்பாடி பழனிசாமி, கைக்கொடுத்து சிரித்துக்கொண்டே கைக்கொடுத்து வரவேற்றார். இருவரும் அருகருகே அமர்ந்துகொண்டு சகஜமாக உரையாடினர்.