இந்தியாவின் மிகவும் பிரபலமான மைக்ரோ எஸ்யூவி காரான டாடா பஞ்ச், அதன் முதல் மிகப்பெரிய அப்டேட்டுடன் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 13) வெளியாகிறது.
2021 இல் அறிமுகமான பிறகு இந்தக் காருக்குக் கிடைக்கும் முதல் ஃபேஸ்லிஃப்ட் (Facelift) இதுவாகும். பஞ்ச் இவி (Punch.ev) மாடலில் உள்ள பல நவீன வடிவமைப்புகள் இப்போது பெட்ரோல் மாடலிலும் கொண்டு வரப்பட்டுள்ளன.
புதிய டாடா பஞ்ச் காரின் முன்புறம் முற்றிலும் மாற்றப்பட்டுள்ளது. மெலிதான கிரில், செங்குத்தாக அமைக்கப்பட்ட எல்இடி ஹெட்லேம்ப்கள் மற்றும் புதிய பம்பர் ஆகியவை காருக்கு ஒரு வலுவான தோற்றத்தை அளிக்கின்றன.
காரின் பின்புறத்திலும் எல்இடி டெயில் லேம்ப்கள் இணைக்கப்பட்டுள்ளன.
புதிய டாடா பஞ்ச் நாளை அறிமுகம்: சிறப்பம்சங்கள் என்னென்ன?
