உலகளவில் வரவேற்கப்படும் நே ச்சா-2 எனும் அனிமேஷன் படம்

அண்மையில், சீனாவின் நே ச்சா-2 எனும் அனிமேஷன் படம் உலகளவில் மிகுந்த கவனத்தை ஈர்த்துள்ளது.

பிப்ரவரி 17ஆம் நாளிரவு, இத்திரைபடத்தின் வசூல் 1212 கோடியே 3 இலட்சம் யுவானைத் தாண்டி, உலகின் திரைப்பட வசூல் பட்டியலில் 9ஆம் இடத்தைப் பிடித்துள்ளது.
சீனாவில், நே ச்சா எனும் சின்னத் தம்பி அனைவரும் அறிந்த புராணக் கதையில் ஒருவராவார்.

சீனாவின் பொது மக்களால் மிகவும் வரவேற்கப்படுகின்ற நட்சத்திரமாவார். கடந்த சில நாட்களில், இத்திரைப்படம், அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து முதலிய நாடுகளின் திரையரங்குகளில் வெளியாகி 90 விழுக்காட்டுக்கும் மேல் இருக்கைகள் நிரம்பி ரசிகர்களின் வரவேற்ப்பைப் பெற்றுள்ளது.

உலகில் புகழ் பெற்ற திரைப்பட மதிப்பீட்டு இணையமான ஐ.எம்.டி.பியில் 8.3 மதிப்பெண்களை இத்திரைப்படம் பெற்றுள்ளது. இத்திரைப்படத்தின் அழகான கவர்ச்சிகரமான சண்டை காட்சிகள் மற்றும் விஷவல் எஃபெக்ட்ஸ் மக்கள் மனதில் ஆழமாக பதிந்துகொள்கின்றன என்று வெளிநாட்டு இணையவாசிகள் பலர் கருத்துகளைத் தெரிவித்தனர்.


அதே வேளையில், இத்திரைப்படத்தில், அன்பு, நட்புறவு, தாயகத்தைப் பாதுகாக்கும் துணிவு முதலியவை, பார்வையாளர்களின் மனதை கொள்ளையடித்துள்ளன.


மேலதிகமான ஈர்ப்பு மிக்க சீனாவின் திரைப்படங்கள் வெளியீடுவதோடு, இவை சீனாவின் உண்மையான, முப்பரிமான மற்றும் முழுமையான திரைப்படங்கள் உலகத்திற்குக் கொண்டு வரும் என்பது எதிர்பார்க்கலாம் என சர்வதேச பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author