உள்ளூர் நேரப்படி, ஜூன் 16ஆம் நாள் பிற்பகல், சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், கசகஸ்தான் குடியரசின் அரசுத் தலைவர் டோகாயேவ் அழைப்பின் பேரில், சிறப்பு விமானம் மூலம், அஸ்தானா நகருக்குச் சென்றடைந்து, அங்கு நடைபெற உள்ள 2ஆவது சீன-மத்திய ஆசிய உச்சிமாநாட்டில் பங்கெடுக்க உள்ளார்.
சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், அஸ்தான் நகரின் நர்சுல்தான் நாசர்பாயேவ் சர்வதேச விமான நிலையத்தைச் சென்றடைந்த போது, அந்நாட்டின் அரசுத் தலைவர் டோகாயேவ், அரசுத் தலைவர் அலுவலகத்தின் தலைவர், வெளியுறவு அமைச்சர், ஆஸ்தான் மாநகராட்சித் தலைவர் உள்ளிட்டோர் இணைந்து, விமான நிலையத்தில் சிறப்பு வரவேற்பு அளித்தார்.