உயர் தர வளர்ச்சியில் சீனப் பொருளாதாரம்

Estimated read time 1 min read

சீன சமூகத்தின் நுகர்வுப்பொருட்களின் மொத்த சில்லறை விற்பனைத் தொகை, மே மாதத்தில், 4 இலட்சத்து 13 ஆயிரத்து 260 கோடி யுவானை எட்டியது. இது, கடந்த ஆண்டை விட 6.4 விழுக்காடு அதிகரித்துள்ளது.

இத்தொகையின் அதிகரிப்பு வேகம், கடந்த 17 திங்கள் காலத்தில் மிகவும் உயரத்தில் உள்ளது. சீனாவின் வெளிநாட்டு வர்த்தகம் உறுதியாக வளர்ந்து வருகிறது. சீனப் பொருளாதாரத்தின் முக்கிய குறியீடுகள் முன்மதிப்பீட்டைத் தாண்டியுள்ளன. சர்வதேச சமூகம் சீனப் பொருளாதாரத்தின் வளர்ச்சியை வெகுவாக மதிப்பிட்டுள்ளது.

இது குறித்து தொடர்புடைய வாரியம் வெளியிட்ட அறிக்கையில்,

முதலில், சீனப் பொருளாதாரம் ஒட்டுமொத்த அளவில் நிதானமாக இயங்கி வருகிறது. அதே வேளையில், சீனப் பொருளாதாரத்தின் உயர் தர வளர்ச்சிக்கான தொடர்புடைய சின்னங்கள் குறிப்பாக முன்னேற்றமடைந்துள்ளன. புதிய எரியாற்றல் வாகனம் மற்றும் சூரிய ஆற்றல் மின்கலனின் உற்பத்தி அளவு முறையே 31.7 விழுக்காட்டிலும் 27.8 விழுக்காட்டிலும் அதிகரித்து, வேகமான வளர்ச்சிப் பாதையில் நுழைந்துள்ளன.

தவிரவும். மே திங்களில், சீனாவின் வெளிநாட்டு வர்த்தகம் நிர்பந்தத்தைச் சமாளித்துள்ளது. உலகத்தை பொறுத்தவரை, நிர்பந்தத்தின் கீழ் சீனப் பொருளாதாரம் நிதானமாகவும் சீராகவும் இயங்குவது என்பது நன்மை பயக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

2020ஆம் ஆண்டு முதல் இது வரை, சீனாவில் புதிதாக செய்த முதலீட்டுத் தொகை 600 கோடி யுவானைத் தாண்டியுள்ளது. சீனாவில் விற்பனை செய்யப்பட்டுள்ள உற்பத்திப் பொருட்களில் 90 விழுக்காட்டிற்கும் மேலான பொருட்கள், சீனாவின் உள்ளூர் பிரதேசத்தில் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. சீனச் சந்தையில் நுழைந்து  38 ஆண்டுகள் ஆகிவிட்டன. சீன சந்தை மீது அதிகமான நம்பிக்கையை கொள்கின்றோம் என்று நேஸ்லே குழுமத்தின் தொடர்புடைய பொறுபாளர் ஒருவர் தெரிவித்தார்.

Please follow and like us:

You May Also Like

More From Author