இவ்வாண்டு தாரிம் எண்ணெய் வயலில் பசுமை மின் உற்பத்தி அளவு 110 கோடி கிலோவாட்-மணி

Estimated read time 1 min read

தாரிம் எண்ணெய் வயல், தக்லமக்கான் பாலைவனத்தின் சூரிய ஆற்றல் வளத்தைப் பயன்படுத்தி, தூய்மையான கரிகுறைந்த, பாதுகாப்பான, உயர் பயனுள்ள நவீன எரியாற்றல் முறைமையை உருவாக்குவதை விரைவுபடுத்துகிறது. தற்போது, எண்ணெய் வயலில் 5 ஒருங்கிணைப்பான ஒளிவோல்ட்டா மின் நிலையங்கள் கட்டியமைக்கப்பட்டுள்ளன.

அவற்றின் மொத்த உற்பத்தி திறன் 26 இலட்சம் கிலோவாட்டை எட்டியுள்ளது. இவ்வாண்டு முதல், மொத்த பசுமை மின் உற்பத்தி அளவு 110 கோடி கிலோவாட்-மணியைத் தாண்டியுள்ளது.

அதே வேளையில், சீனாவின் சின்ஜியாங் ருவாவ் ட்சியாங் மாவட்டத்தின் தென் பகுதியிலுள்ள பாலைவளத்தில், ஒரு பத்து லட்சம் கிலோவாட் உற்பத்தி திறன் கொண்ட ஒளிவோல்ட்டா திட்டப்பணி இவ்வாண்டின் நவம்பர் இறுதிக்குள் கட்டியமைக்கப்படும். திட்டப்பணி கட்டியமைக்கப்பட்டு இயங்கிய பின், ஆண்டு மின் உற்பத்தி அளவு 161.7 கோடி கிலோவாட்-மணியை எட்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

You May Also Like

More From Author