உடல் எடையை குறைக்க நெல்லிக்காய் ஜூஸ்

உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் நெல்லிக்காயை ஜூஸ் செய்து சாப்பிட வேண்டும். இந்த நெல்லிக்காய்களை வில்லைகளாக வெட்டி அதனுடன் தண்ணீர் சேர்த்து அரைத்து ஜூசாக்கி அதனை வடிகட்டி அப்படியேவும் குடிக்கலாம். நீங்கள் விருப்பப்பட்டால் தேன் கலந்தும் குடிக்கலாம். காலையில் தினமும் வெறும் வயிற்றில் இந்த நெல்லிக்காய் ஜூசை குடித்து வருவதன் மூலம் உடல் எடையை குறைக்க முடியும். அதுமட்டுமில்லாமல் இதனை நீங்கள் பயன்படுத்திய ஒரு வாரத்திலேயே உங்களால் உணரமுடியும். நெல்லிக்காயில் உள்ள ஹப்போலிபிடெமிக் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பு மற்றும் கொழுப்போடு தொடர்புடைய பண்புகளை எதிர்த்து போராடுகிறது. இதன்மூலம் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் வெளியேறுகிறது.

 

You May Also Like

More From Author