இமாலச்சலப் பிரதேசம் சிம்லாவில் பாரம்பரிய விளையாட்டான அம்பு மற்றும் வில்லைப் பாதுகாக்க கிராம மக்கள் திருவிழா நடத்துகின்றனர். இந்த திருவிழா நேற்று தொடங்கி இரண்டு நாட்கள் நடைபெறுகிறது.
இமாச்சலப் பிரதேசம் சிம்லாவில் இருந்து சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில் ஜுப்பர்ஹாட்டி அமைந்துள்ளது. இங்கு மிகவும் பழமையான மற்றும் பாரம்பரியம் மிக்க அம்பு மற்றும் வில் விளையாட்டு கிராமப்புற அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த விளையாட்டு மக்களின் மத நம்பிக்கைகள் மற்றும் நூற்றாண்டு பழமையான அம்பு மற்றும் வில் விளையாட்டின் மீதான அவர்களின் அன்பின் கலவையாகும். மேலும், இந்த விளையாட்டைப் பாதுகாக்கவும், ஊக்குவிக்கவும் ஒரு முயற்சியாகும்.
இந்த திருவிழா நேற்று தொடங்கி இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. சிவனை மகிழ்விப்பதற்காக இந்த திருவிழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தெய்வத்தை மகிழ்விப்பதற்காக, தோடா குழு ஒரு சிறிய மைதானத்திற்கு நடனமாடியும், பாடல்களைப் பாடிக்கொண்டு வருகிறார்கள். இந்த பாரம்பரிய நடனத்தைப் பார்த்து இரசிப்பதற்காக சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் வருகின்றார்கள்.
சிம்லாவில் உள்ள கிராமப்புற இளைஞர்கள் நூற்றாண்டு பழமையான பாரம்பரியத்தை, இங்கு விளையாட்டு வடிவில் ஊக்குவிக்க விரும்புகிறார்கள் மற்றும் வளமான பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்ல விரும்புகிறார்கள்.
இதுகுறித்து கிராமத்தைச் சேர்ந்தவர் கூறியதாவது, “இந்த விளையாட்டு கௌரவர்கள் மற்றும் பாண்டவர்களின் காலகட்டத்திற்கு முந்தைய பழமையான வரலாற்றைக் கொண்டுள்ளது. இந்த பழமையான பாரம்பரியத்தை நாங்கள் ஊக்குவிக்க விரும்புகிறோம். மேலும், அனைத்து இளைஞர்களும் கற்றுக் கொடுக்க விரும்புகிறோம் என்று கூறினார்.