அமெரிக்க ராணுவம் தலையிட்டால் பின்விளைவு கடுமையாக இருக்கும் – ஈரான் தலைவர் அயதுல்லா காமேனி எச்சரிக்கை

Estimated read time 0 min read

இஸ்ரேல் உடனான மோதலில் அமெரிக்க ராணுவம் தலையிட்டால், சரி செய்ய முடியாத பின்விளைவு ஏற்படும் என ஈரான் எச்சரித்து உள்ளது.

ஈரான் தலைவர் அயதுல்லா காமேனி நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி மூலம் உரையாற்றினார். அப்போது பேசியவர், ஈரான் மீது தாக்குதல் நடத்தி இஸ்ரேல் மிகப்பெரிய தவறை செய்துவிட்டது எனவும் இதற்கு உரிய தண்டனையை அந்த நாடு அனுபவிக்க வேண்டியிருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் உடனான மோதலில் அமெரிக்கா ராணுவம் தலையிட்டால், சரி செய்ய முடியாத பின்விளைவு ஏற்படும் எனவும் இந்த விவகாரத்தில் அமெரிக்கா தலையிடுவது என்பது இஸ்ரேலின் பலவீனத்தை காட்டுகிறது என்றும் தெரிவித்துள்ளார்.

You May Also Like

More From Author