எம்.எஸ் தோனி, விராட் கோலி, ரோஹித் சர்மாவை பின்னுக்கு தள்ளி இந்திய கேப்டனாக – சூரியகுமார் யாதவ் புதிய சாதனை

Estimated read time 0 min read

கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரினை வென்ற கையோடு ரோகித் சர்மா டி20 வடிவ போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார். அதன்பிறகு ஹார்டிக் பாண்டியா டி20 அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் புதிய பயிற்சியாளரான கௌதம் கம்பீர் அவருக்கு பிடித்தமான சூரியகுமார் யாதவை இந்திய டி20 அணியின் புதிய கேப்டனாக கொண்டு வந்தார். அப்படி சூரியகுமார் யாதவ் டி20 அணியின் கேப்டனாக மாறியதிலிருந்து தொடர்ச்சியாக இந்திய அணி வெற்றிகளை பெற்று வருவது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேப்டனாக புதிய சாதனை நிகழ்த்திய சூரியகுமார் யாதவ் :

இதுவரை சூரியகுமார் யாதவ் தலைமையில் இந்திய அணி எந்த ஒரு டி20 தொடரையும் இழக்காமல் வெற்றி நடைபோட்டு வருவதால் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பை தொடரிலும் சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணியே பங்கேற்கும் என்று தெரிகிறது. முன்னதாக தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்று விளையாடி வரும் இந்திய அணியானது :

நேற்று துபாய் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது லீக் ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரக அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் முதலில் இந்திய அணி பந்துவீசும் என்று அறிவித்தார். அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய ஐக்கிய அரபு அமீரக அணியானது இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் 13.1 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 57 ரன்களை மட்டுமே குவித்தது.

பின்னர் 58 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணி 4.3 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 60 ரன்கள் குவித்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த போட்டியில் இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றதன் மூலம் முன்னாள் கேப்டன்களான எம்.எஸ் தோனி, ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோரது சாதனையை தற்போது சூரியகுமார் யாதவ் முறியடித்துள்ளார்.

அந்த வகையில் சூரியகுமார் யாதவ் நிகழ்த்திய சாதனை யாதெனில் : இந்திய அணிக்காக சர்வதேச டி20 போட்டிகளில் அதிக வெற்றி சதவீதத்தை கொண்ட கேப்டன் என்ற சாதனையை சூர்யகுமார் யாதவ் நிகழ்த்தியுள்ளார். அதன்படி சூர்யகுமார் யாதவ் 82.6% வெற்றி சதவீதத்துடன் இந்த பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார்.

அவருக்கு அடுத்து ரோகித் சர்மா 80.6% சதவீதத்துடன் இரண்டாவது இடத்திலும், விராட் கோலி 66.7% மூன்றாவது இடத்திலும், ஹார்டிக் பாண்டியா 62.5% நான்காவது இடத்திலும், எம் எஸ் தோனி 60.6 சதவீதத்துடன் ஐந்தாவது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Please follow and like us:

You May Also Like

More From Author