சர்வதேச கவனத்தைப் பெற்ற சீனப் பாரம்பரிய பண்பாட்டுப் புத்தகங்கள்

Estimated read time 0 min read

31வது பெய்ஜிங் சர்வதேச புத்தக கண்காட்சி ஜுன் 18 முதல் 22ஆம் நாள் நடைபெற்றது. நடப்புக் கண்காட்சியில், சீனாவின் பல்வகை குழந்தை புத்தகங்களுக்கான வெளிநாட்டுப் பதிப்புரிமைக்கான வர்த்தக உடன்படிக்கைகள் எட்டப்பட்டுள்ளன. புத்தாக்கம் கொண்ட பல்வேறு தனித்துவமான குழந்தை புத்தகங்கள் சர்வதேச சந்தையின் கவனத்தை ஈர்த்துள்ளன.

மேலும், நடப்புப் கண்காட்சியில், சீனப் பாரம்பரிய பண்பாட்டுக் கதைகளின் அம்சங்கள் பற்றிய கண்காட்சி அரங்குகள் முதல் முறையாக அமைக்கப்பட்டன. நெஜா, சீனக் கடவுள்களின் கதை, துங்ஹுவாங் உள்ளிட்ட முதலிய பாரம்பரிய பண்பாட்டுக் கதைகள், புத்தகம், தொலைக்காட்சி நிகழ்ச்சி, திரைப்படம், அசைவூட்டம் ஆகியவற்றின் மூலம் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

80 நாடுகளைச் சேர்ந்த 1700 வெளிநாட்டு நிறுவனங்கள் நடப்புப் கண்காட்சியில் பங்கெடுத்தன. சீனாவின் நீண்டகால வரலாறு மற்றும் தற்கால வளர்ச்சி, அவர்களது கவனத்தை ஈர்த்துள்ளன.

தவிரவும், சீன அறிவியல் மற்றும் தொழில் நுட்ப வளர்ச்சியின் சாதனைகளை எடுத்துக்கூறும் கல்வியல் புத்தகங்களும் பெரும் கவனத்தைப் பெற்று, சர்வதேச செல்வாக்கு உயர்ந்து வருகின்றன.

You May Also Like

More From Author