காஞ்சிபுரம் அருகே திரௌபதி அம்மன் கோயில் அக்னி வசந்த மகோற்சவ பெருவிழா!

Estimated read time 1 min read

காஞ்சிபுரம் அருகே திரௌபதி அம்மன் கோயில் அக்னி வசந்த மஹோத்சவ பெருவிழாவையொட்டி, துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி வெகுவிமரிசையாக நடைபெற்றது.

காஞ்சிபுரம் மாவட்டம் பூக்கடை சத்திரத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த ஸ்ரீ திரௌபதி அம்மன் கோயிலில் கடந்த 2-ஆம் தேதி மகாபாரத அக்னி வசந்த பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழாவின் முக்கிய நிகழ்வான துரியோதனன் படுகளம், சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில், சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.

You May Also Like

More From Author