அமெரிக்க நிதி அமைச்சரைத் தொடர்பு கொண்ட ஹேலிஃபேங்

ஜுலை 30ஆம் நாள் இரவு, சீன-அமெரிக்கப் பொருளாதாரம் மற்றும் வர்த்தகத்திற்கான சீனத் தரபபின் தலைவரும் துணைத் தலைமையமைச்சருமான ஹேலிஃபேங், அமெரிக்க தரப்பின் தலைவரும் நிதித் துறை அமைச்சருமான பெஸ்ஸன்ட், வர்த்தகப் பிரதிநிதி கிரீர் ஆகியோரைக் காணொலியின் மூலம் தொடர்பு கொண்டார். இத்தொடர்பின் போது அண்மையில், சீனா மீது அமெரிக்கா மேற்கொண்ட பொருளாதார மற்றும் வர்த்தகத்  தடை நடைவடிக்கை குறித்து சீனத்  தரப்பு கடும் கவனம் தெரிவித்தது.  இரு நாட்டுத் தலைவர்களின் நெடுநோக்குத் தலைமையின் கீழ், பரிமாற்றத்தை வலுப்படுத்தி, நம்பிக்கையை அதிகரித்து, ஒத்துழைப்பை விரிவாக்கி, இரு நாட்டுப் பொருளாதார மற்றும் வர்த்தக உறவு நிதானமாகவும் சீராகவும் வளர்வதை முன்னேற்றி, இரு நாடுகளும் நிதானமும்  ஆக்கப்பூர்வததுடனும் கூடிய நெடுநோக்கு உறவை உருவாக்கப் பாடுபட ஒப்புக்கொண்டன.

You May Also Like

More From Author