செயற்கை நுண்ணறிவில் முன்னணியில் இருக்கும் சீனா

Estimated read time 1 min read

சீனாவின் மூன்ஷொட் செயற்கை நுண்ணறிவுத் தொழில் நிறுவனம் 27ம் நாள், புதிய கிமி கே3 மாதிரியின் மூல நிரலை முழுமையாக திறந்து வைப்பதாக அறிவித்தது. இந்த மாதிரியின் அளவுரு 2.8 இலட்சம் கோடியைத் தாண்டியது. உலகளவில் மிக அதிக அளவுரு கொண்ட திறந்த மூல மாதிரி இதுவாகும்.

தொடர்புடையத் தொழில் அறிக்கையின்படி, சீனா ஆராய்ந்து வளர்க்கும் திறந்த மூல மாதிரியின் பதிவிறக்கம், உலகின் மொத்த அளவில் 41 விழுக்காட்டை வகிக்கிறது. உலகின் முக்கிய மாதிரிப் பயன்பாட்டுத் தரவரிசையில் உள்ள முதல் 6 மாதிரிகள் அனைத்தும் சீனாவைச் சேர்ந்தவை. கடந்த 12 மாதங்களின் 9 மாதக் காலத்தில் சீனாவின் ஏஐ மாதிரிகள், உலகின் திறந்த மூல மாதிரி அளவுருவின் உச்ச வரம்பை நிலைநிறுத்தியுள்ளது. அவற்றின் மறுசெய்கை வேகம் உலகளவில் முன்னணியில் உள்ளது என்றும்  தெரிவிக்கப்பட்டுள்ளது. 

படம் VCG

You May Also Like

More From Author