பெங்களூரு உணவகங்கள் நாளை முதல் மூடல்? வர்த்தக எரிவாயு தட்டுப்பாட்டால் உச்சகட்ட அதிர்ச்சி  

Estimated read time 1 min read

பெங்களூரில் உள்ள ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களுக்கு வழங்கப்படும் வர்த்தக எல்பிஜி சிலிண்டர்களின் விநியோகம் திடீரென நிறுத்தப்பட்டதால், நாளை (செவ்வாய்க்கிழமை, மார்ச் 10, 2026) முதல் நகரின் பெரும்பாலான உணவகங்கள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
பெங்களூர் ஹோட்டல்கள் சங்கம் இன்று வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பில் கூறியவை பின்வருமாறு:-
விநியோகம் நிறுத்தம்: திங்கள்கிழமை முதல் எண்ணெய் நிறுவனங்கள் எவ்வித முன்னறிவிப்புமின்றி வணிக சிலிண்டர் விநியோகத்தை நிறுத்திவிட்டன.
இருப்பு நிலவரம்: பெரும்பாலான உணவகங்களில் செவ்வாய்க்கிழமை மாலை வரை மட்டுமே சமைப்பதற்கான எரிவாயு இருப்பு உள்ளது.
அதிரடி முடிவு: புதன்கிழமை காலையிலிருந்து புதிய சிலிண்டர்கள் வராவிட்டால், நகரில் உள்ள ஆயிரக்கணக்கான ஹோட்டல்கள் அடுப்புகளை அணைக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படும்.

You May Also Like

More From Author