சீனக் கடல்சார் பல்கலைக்கழகம் நிறுவப்பட்ட 100ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் அண்மையில் இப்பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு பதில் கடிதம் அனுப்பி அனைவருக்கும் வாழ்த்துகள் தெரிவித்தார்.
அறிவியல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி மற்றும் நாட்டின் நெடுநோக்குத் தேவையை வழிகாட்டலாக் கொண்டு, கடல்சார் துறை சார்ந்து மேலதிக திறமைசாலிகளை உருவாக்க ஆசிரியர்களும் மாணவர்களும் பாடுபட வேண்டும். இதன் மூலம், கல்வி மற்றும் கடல்சார் துறையிலான வல்லரசை உருவாக்குவதற்கு பங்களிப்பை ஆற்ற வேண்டும் என்று ஷிச்சின்பிங் இக்கடிதத்தில் வலியுறுத்தார்.
1924ஆம் ஆண்டு நிறுவப்பட்ட சீனக் கடல்சார் பல்கலைக்கழகம் இவ்வாண்டு நூற்றாண்டில் அடியெடுத்து வைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.