நேபாளத்தில் நடைபெற்ற சி ட்சாங்கின் வளர்ச்சி சாதனைகள் பற்றிய பரிமாற்றக் கூட்டம்

சீன அரசவை தகவல் தொடர்புப் பணியகத்தின் ஏற்பாட்டில் சீனத் திபெத்தியல் அறிஞர்களைக் கொண்ட பரிமாற்றக் குழுவினர் 24ஆம் நாள் நேபாளத்தின் தலைவர் காத்மண்டுவில் நடத்திய கூட்டத்தில் புதிய யுகத்தில் அரசியல், பொருளாதாரம், சமூகம் மற்றும் பண்பாடு முதலிய பல்வேறு லட்சியங்களில் சி ட்சாங் பெற்றுள்ள பன்முக முன்னேற்றம் மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சாதனைகளை விவரித்தனர்.

இக்கூட்டத்தில் இக்குழுவினர் கூறுகையில், சி ட்சாங்கில் பதிவு செய்யப்பட்ட 6 லட்சத்து 28 ஆயிரம் வறிய மக்கள் அனைவரும் வறுமையிலிருந்து விடுபட்டுள்ளனர். 74 வறிய மாவட்டங்கள் மற்றும் பகுதிகள் அனைத்தும் வறுமையிலிருந்து விடுபட்டுள்ளன.

குழந்தை காப்பகம், துவக்க நிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளிகளில் 15 ஆண்டுகால இலவசக் கல்வி அமைப்பு முறை நிறுவப்பட்டது. இது சீனாவில் முன்னணியில் இருப்பதோடு, சி ட்சாங்கின் பொருளாதாரமும் உயர் தரமாக வளர்ந்து வருகிறது என்று தெரிவித்தனர்.

 

You May Also Like

More From Author