8ஆவது சீனா சர்வதேச இறக்குமதி கண்காட்சிக்கான ஆயத்த பணிகள் நிதானமாக முன்னேற்றி வருகின்றன. இதுவரை 2 இலட்சத்து 40 ஆயிரம் சதுர மீட்டருக்கும் அதிகமான பரப்பளவில் நிறுவனங்கள் முன்பதிவு செய்துள்ளன என்று சீனச் சர்வதேச இறக்குமதி கண்காட்சி அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
3 இலட்சத்து 60 ஆயிரம் சதுர மீட்டரைக் கொண்ட இக்கண்காட்சி, அரசு மற்றும் வணிகத் தொடர்புக்கும் ஒத்துழைப்பு பேச்சுவார்த்தைகளுக்கு வசதியான நிலைமைகளை வழங்கும்.
அனைத்தையும் உள்ளடக்கிய கண்காட்சி என்ற கருத்துக்கு முக்கியத்துவம் அளித்து, மேலதிக நடுத்தர சிறிய தொழில் நிறுவனங்களுக்கு இக்கண்காட்சியில் கலந்து கொள்ள உதவி செய்வதுடன், எண்ணியல் பொருளாதாரம், பசுமை மற்றும் குறைந்த கார்பன் ஆகிய துறைகளில் அதிக தொழில் முனைவோர் திட்டங்களை உருவாக்க வழிவகுக்கும்.
அதே காலத்தில் 8ஆவது ஹொங்க்சியாவோ சர்வதேசப் பொருளாதார மன்றம் நடைபெறவுள்ளது.