2025ஆம் ஆண்டு உலக எண்ணியல் பொருளாதார மாநாடு ஜூலை 2ஆம் நாள் பெய்ஜிங்கில் துவங்கியது. “எண்ணியலுக்கு நேயமான நகரத்தைக் கட்டியமைத்தல்” என்பது நடப்பு மாநாட்டின் கருப்பொருளாகும். உலகளாவிய 50க்கும் மேலான நாடுகள் மற்றும் முக்கியச் சர்வதேச அமைப்புகளைச் சேர்ந்த 300க்கும் மேலான சர்வதேச விருந்தினர்கள் உள்ளிட்ட சுமார் ஆயிரம் பேர் இதில் கலந்து கொண்டனர்.
பெய்ஜிங் மாநகரம், ஐரோப்பா, வட அமெரிக்கா, ஆசிய-பசிபிக், மத்திய கிழக்கு, லத்தின் அமெரிக்கா உள்ளிட்ட பிரதேசங்களைச் சேர்ந்த 40க்கும் மேலான நகரங்களுடன் சேர்ந்து உலக எண்ணியல் பொருளாதார நகரங்களின் கூட்டணி உருவாக்கும் திட்டம் இத்துவக்க விழாவில் முன்வைக்கப்பட்டது. இந்தக் கூட்டணி, எண்ணியல் அடிப்படை வசதிகளின் கட்டுமானம், நாடு கடந்த தரவுகளின் மேலாண்மை, செயற்கை நுண்ணறிவுத் துறையில் ஒழுக்கவியல், நுண்ணறிவு நகரப் பயன்பாடு உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து, நகரங்களின் கூட்டு வளர்ச்சி, தொழில்களின் உயிரினச் சூழலின் கட்டுமானம், எண்ணியல் மேலாண்மைக்கான புத்தாக்கம் முதலியவற்றைச் செயலப்டுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.