சீனத் தலைமையமைச்சர் லீ ச்சியாங், சிங்கப்பூர் தலைமையமைச்சர் லாரன்ஸ் வோங்குடன், அக்டோபர் 25ஆம் நாள் சிங்கப்பூரில் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது லீ ச்சியாங் கூறுகையில், சிங்கப்பூருடன் இணைந்து, இரு நாட்டு அரசுத் தலைவர்களின் நெடுநோக்கு வழிக்காட்டலுடன் பாரம்பரிய நட்புறவை வெளிகொணர்ந்து, ஒன்றுக்கொன்று நம்பிக்கையை வலுப்படுத்தி, பயனுள்ள ஒத்துழைப்புகளை விரிவுப்படுத்தி, இரு தரப்புறவை ஆழமாக்கி, பிரதேச அமைதி மற்றும் வளர்ச்சிக்கு சீனா மேலதிக பங்காற்ற விரும்புவதாக தெரிவித்தார்.
லாரன்ஸ் வோங் கூறுகையில், ஒரே சீனா என்ற கோட்பாட்டில் சிங்கப்பூர் ஊன்றி நின்று வருகிறது. சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் முன்வைத்த உலக வளர்ச்சி முன்மொழிவுக்கு சிங்கப்பூர் ஆதரவளித்து, சீனாவுடன் தாராள வர்த்தகத்தைப் பேணிக்காத்து, பலதரப்புவாதத்தில் ஊன்றி நிற்க விரும்புவதாக தெரிவித்தார்.
மேலும், சிங்கப்பூரில் அக்டோபர் 26ஆம் நாள் நடைபெற்ற சீன-சிங்கப்பூர் தொழில் மற்றும் வணிக துறை பேச்சுவார்த்தையில் சீனத் தலைமையமைச்சர் லீ ச்சியாங், சிங்கப்பூர் துணைத் தலைமையமைச்சர் கான் கிம் யோங்குடன் கலந்து கொண்டார்.
அப்போது லீ ச்சியாங் கூறுகையில், கடந்த 35 ஆண்டுகளாக, இரு நாடுகளின் கூட்டு முயற்சிகளுடன், சீன-சிங்கப்பூர் நட்பாரந்த ஒத்துழைப்புகள் செழுமையான சாதனைகளைப் பெற்றுள்ளன என்றார். மேலும், எதிர்காலத்தில், உயர்நிலை திறப்புப் பணியை சீனா உறுதியுடன் முன்னேற்றி, வணிக சூழ்நிலையைத் தொடர்ச்சியாக மேம்படுத்தி, தொழில் நிறுவனங்களின் அக்கறை கொண்ட பிரச்சினைகளைத் தீர்த்து, இரு நாட்டுத் தொழில் நிறுவனங்களின் பெரு வளர்ச்சிக்கு ஆதரவளிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
