ஆண்டுதோறும் நடைபெறும் கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான புகழ்பெற்ற சூரசம்ஹாரம் சடங்கு, திங்கட்கிழமை (அக்டோபர் 27) மாலை 6 மணிக்கு திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோவிலில் நடைபெற உள்ளது.
இந்த முக்கியமான நிகழ்வில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்குக் கோவில் நிர்வாகம் சில குறிப்பிடத்தக்கக் கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.
அதன்படி திங்கட்கிழமை அதிகாலை 4 மணிக்குக் கோவில் நடை திறக்கப்பட்டாலும், படிக்கட்டுகள், ரோப் கார் மற்றும் வின்ச் ரயில் மூலம் மலைக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் காலை 11 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
மேலும், கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, அனைத்துச் சிறப்பு தரிசன டிக்கெட்டுகளின் விற்பனையும் காலை 11.30 மணிக்கு நிறுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சூரசம்ஹாரத்தை முன்னிட்டு பழனி முருகன் கோவிலில் பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள்
