10ம் வகுப்பு போதும்..! ஈரோடு மாவட்டத்தில் 141 கிராம உதவியாளர் காலியிடங்கள்

Estimated read time 1 min read

பணியின் பெயர்: கிராம உதவியாளர்

சம்பளம்: மாதம் Rs.11,100 முதல் Rs.35,100 வரை

காலியிடங்கள்: 141

தாலுகா வாரியாக காலியிடங்கள் எண்ணிக்கை:

  • பவானி – 11
  • பெருந்துறை – 39
  • கோபிசெட்டிபாளையம் – 19
  • மொடக்குறிச்சி – 15
  • கொடுமுடி – 10
  • ஈரோடு – 09
  • தாளவாடி – 01
  • சத்தியமங்கலம் – 07
  • நம்பியூர் – 16
  • அந்தியூர் – 14

கல்வி தகுதி: 10ம் வகுப்பு

இதர தகுதிகள்: விண்ணப்பதாரர் அந்த வட்டத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும்.

தமிழில் பிழையின்றி எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட வட்டத்தை சேர்ந்தவர்களாகவும் அதே வட்டத்தில் நிரந்தரமாக வசித்து வருவதாகவும் இருக்க வேண்டும்.

காலிப்பணியிடம் அறிவிக்கப்பட்ட கிராமத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு அக்கிராம பணியிடத்திற்கு முன்னுரிமை வழங்கப்படும்.

வயது வரம்பு:

பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் பட்டியல் இனத்தவர் பழங்குடியினர் – 21 வயது நிரம்பியவராகவும் 37 வயதுக்கு மிகையாகாமல் இருக்க வேண்டும்.

மாற்றுத்திறனாளி – 21 வயது நிரம்பியவராகவும் 42 வயதுக்கு மிகையாகாமல் இருக்க வேண்டும்.

இதர வகுப்பினர் – 21 வயது நிரம்பியவராகவும் 32 வயதுக்கு மிகையாகாமல் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யும் முறை:

  1. மிதிவண்டி /இருசக்கர வாகனம் ஓட்டும் திறன், வாசித்தல் மற்றும் எழுதும் திறன்
  2. நேர்காணல்
  3. சான்றிதழ் சரிபார்ப்பு

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 07.07.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 05.08.2025

எழுத்து தேர்வு தேதி: 05.09.2025

நேர்காணல் நடைபெறும் தேதி: 20.09.2025 to 26.09.2025

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பப் படிவம் மற்றும் நிபந்தனைகளை https://erode.nic.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

விண்ணப்ப படிவத்தினை முழுமையாக பூர்த்தி செய்து உரிய ஆவணங்களை இணைத்து சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் அலுவலகத்தில் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை நேரிலோ அல்லது பதிவு அஞ்சல் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம்.

Please follow and like us:

You May Also Like

More From Author