RAW , RSS மீது தடை விதிக்கணும்: அமெரிக்க ஆணையம் இந்தியா தரமான பதிலடி..!! 

Estimated read time 1 min read

இந்தியாவில் மத சுதந்திரம் பாதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க சர்வதேச மத சுதந்திர ஆணையம் (USCIRF) வெளியிட்டுள்ள அறிக்கையை மத்திய அரசு திட்டவட்டமாக நிராகரித்துள்ளது. இந்த அறிக்கை ஒருதலைப்பட்சமானது மற்றும் உள்நோக்கம் கொண்டது என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் சாடியுள்ளது.

அமெரிக்க கூட்டாட்சி அரசாங்கத்தின் கீழ் இயங்கும் இந்த ஆணையம், 2026-ஆம் ஆண்டிற்கான தனது வருடாந்திர அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், மத சுதந்திர மீறல்கள் நடைபெறுவதாகக் கூறி, இந்தியாவை “குறிப்பிட்டு கவனிப்பட வேண்டிய நாடு” (CPC) எனப் பட்டியலிட பரிந்துரைத்துள்ளது.

மேலும், இந்தியாவின் உளவு அமைப்பான ரா’ (R&AW) மற்றும் ஆர்.எஸ்.எஸ். (RSS) ஆகிய அமைப்புகள் மீது பொருளாதாரத் தடைகளை விதிக்க வேண்டும் என்றும், இந்தியாவிற்கு வழங்கப்படும் பாதுகாப்பு உதவிகளை மத சுதந்திரத்துடன் இணைக்க வேண்டும் என்றும் அந்த அறிக்கை கோரியுள்ளது.

இது குறித்து இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, அமெரிக்க ஆணையத்தின் அறிக்கையை நாங்கள் முற்றிலுமாக நிராகரிக்கிறோம். பல ஆண்டுகளாகவே இந்த ஆணையம் ஆதாரமற்ற தகவல்களையும், சித்தாந்த ரீதியான கருத்துக்களையும் கொண்டு இந்தியாவைப் பற்றிய தவறான சித்திரத்தை உருவாக்கி வருகிறது. இத்தகைய ஒருதலைப்பட்சமான விமர்சனங்கள் அந்த ஆணையத்தின் நம்பகத்தன்மையையே கேள்விக்குள்ளாக்குகின்றன.

இந்தியாவைக் குறை கூறுவதற்கு முன்பாக, அமெரிக்காவில் இந்து கோயில்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் மற்றும் அங்குள்ள இந்திய வம்சாவளியினருக்கு எதிராக அதிகரித்து வரும் அச்சுறுத்தல்கள் குறித்து அந்த ஆணையம் கவனம் செலுத்த வேண்டும் என்று ரந்தீர் ஜெய்ஸ்வால் அறிவுறுத்தினார்.

2025-ஆம் ஆண்டில் இந்தியாவில் மத மாற்றத் தடைச் சட்டங்கள் வலுப்படுத்தப்பட்டதாகவும், சிறுபான்மையினரின் வழிபாட்டுத் தலங்கள் குறிவைக்கப்பட்டதாகவும் அந்த அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும், அமெரிக்காவில் உள்ள இந்திய சிறுபான்மையினரை இந்திய அரசு கண்காணிப்பதாகக் கூறி, அதற்கென தனியாக சட்டம் இயற்றவும் அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு இந்த ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. மேலும் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் இத்தகைய அறிக்கைகள் தேவையற்ற சலசலப்பை ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author