சீனா மற்றும் அமெரிக்கா ஆகிய இரு தரப்பின் கலந்தாய்வின்படி, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழு உறுப்பினரும், சீன அரசவையின் துணைத் தலைமை அமைச்சருமான ஹெ லிஃபுங் அக்டோபர் 24முதல் 27ஆம் நாள் வரை பிரதிநிதிக் குழுவுக்குத் தலைமை தாங்கி மலேசியாவுக்குச் சென்று அமெரிக்கத் தரப்புடன் பொருளாதார மற்றும் வர்த்தகக் கலந்தாய்வை நடத்தவுள்ளார்.
சீன வணிகத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் 23ஆம் நாள் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் தொடர்புடைய கேள்விக்குப் பதிலளித்த போது இவ்வாறு தெரிவித்தார்.
