சீன வாகனத் தொழில் சங்கம் 10ஆம் நாள் வெளியிட்ட தரவின்படி, 2025ஆம் ஆண்டு முற்பாதியில் சீன வாகனங்களின் உற்பத்தி மற்றும் விற்பனை எண்ணிக்கை இரண்டும் முதன்முறையாக 1.5கோடியைத் தாண்டியுள்ளன. வாகனத் தொழில் மேலும் உயிராற்றலுடன் வளர்ந்துள்ளது.
அவற்றில் புதிய எரியாற்றல் வாகனங்களின் உற்பத்தி மற்றும் விற்பனை எண்ணிக்கை கடந்த ஆண்டை விட, முறையே 41.4விழுக்காடு மற்றும் 40.3விழுக்காடு அதிகரித்துள்ளது.
சீன வாகனங்களின் ஏற்றுமதி அதிகரிப்புப் போக்கை நிலைநிறுத்தியுள்ளது. ஜனவரி முதல் ஜூன் வரை, வாகன ஏற்றுமதி எண்ணிக்கை 30லட்சத்து 83ஆயிரத்தைத் தாண்டி கடந்த ஆண்டை விட, 10.4விழுக்காடு அதிகமாகும். அவற்றில் புதிய எரியாற்றல் வாகனங்களின் ஏற்றுமதி 10லட்சத்து 60ஆயிரத்தை எட்டி 75.2விழுக்காடு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.