எதிர்கால உச்சி மாநாட்டிற்கான இளைஞர்கள் கூட்டம் ஆகஸ்டு 13ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றது. சுமார் 100 நாடுகளைச் சேர்ந்த 300க்கும் மேலான இளைஞர் அமைச்சர்கள், இளைஞர் முன்னோடிகள், பல்வேறு துறைகளின் இளைஞர் பிரதிநிதிகள் ஆகியோர், ஐ.நாவின் எதிர்கால உச்சி மாநாடு பற்றிய அம்சங்கள் குறித்து ஆழமாக விவாதம் நடத்தினர். இவ்விவாதம் பற்றிய அறிக்கைகள், ஐ.நாவின் எதிர்கால உச்சி மாநாட்டுக்கு சமர்ப்பிக்கப்படும்.
இளைஞர்கள், உலகத்தின் எதிர்காலமாகும். ஐ.நாவின் எதிர்கால உச்சி மாநாட்டின் அம்சங்கள் மற்றும் சாதனைகள், இளைஞர்களின் வளர்ச்சியுடன் நெருங்கிய தொடர்புடையவை. ஐ.நாவின் தொடரவல்ல வளர்ச்சிக்கான 2030ஆம் ஆண்டு நிகழ்ச்சி நிரலை நனவாக்குவதற்கும், உலக அமைதி மற்றும் வளர்ச்சியைப் பேணிக்காப்பதற்கும், உலகளவிலான இளைஞர்களின் ஒற்றுமை மற்றும் முயற்சிகள் தேவைப்படுகின்றன என்று இக்கூட்டத்தில் பங்கெடுத்த இளைஞர்கள் தெரிவித்தனர்.
இவ்வாண்டின் செப்டம்பர் திங்கள் நடத்தப்படும் ஐ.நாவின் எதிர்கால உச்சி மாநாடு, பலதரப்புவாதம் மற்றும் வளர்ச்சிக்கான நிகழ்ச்சி நிரலை முன்னேற்றுவதற்கு முக்கிய பங்காற்றும்.