ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம் ஜுலை 15ஆம் நாள் சீனாவின் தியான்ஜின் மாநகரில் நடைபெற்றது. சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ இந்தக் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார்.
இதில், எஸ்.சி.ஓ அமைப்பின் பல்வேறு துறைகளிலான ஒத்துழைப்பு, முக்கிய சர்வதேச மற்றும் பிராந்திய விவகாரங்கள் ஆகியவற்றில் பல்வேறு தரப்புகள் கவனம் செலுத்தி வருவதோடு பல தீர்மானங்கள் மற்றும் ஆவணங்களில் கையெழுத்திடப்பட்டுள்ளன.
இந்த வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் தியான்ஜின் உச்சிமாநாட்டிற்கான ஏற்பாடுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. கூட்டத்திற்குப் பிறகு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வாங் யீ கூறுகையில், எஸ்.சி.ஓ உச்சிமாநாடு வரும் ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 1ஆம் நாள் வரை தியான்ஜின் நகரில் நடத்தப்பட உள்ளதாகவும், 20-க்கும் அதிகமான நாடுகளின் தலைவர்களும் 10 சர்வதேச அமைப்புகளின் தலைவர்களும் உச்சிமாநாடு தொடர்பான நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளதாகவும் அறிவித்தார்.