தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) இரண்டாவது மாநில மாநாடு வருகிற ஆகஸ்ட் 25ஆம் தேதி திங்கட்கிழமை அன்று மதுரையில் நடைபெற உள்ளது என்று கட்சித் தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.
இந்த தகவலை அவர் தனது எக்ஸ் (முன்னர் ட்விட்டர்) பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
“வாகை சூடும் வரலாறு திரும்பட்டும். வெற்றி நிச்சயம்,” என்று அவர் பதிவிட்டுள்ளார்.
தவெக சார்பில் இதற்கு முந்தைய முதல் மாநில மாநாடு 2024 அக்டோபர் 27ஆம் தேதி, விழுப்புரம் – விக்கிரவாண்டி அருகே வி. சாலையில் நடைபெற்றது.
அந்த மாநாட்டில் விஜய் தமிழக அரசியல் சூழ்நிலையைப்பற்றி விரிவாக பேசியதுடன், திராவிடமும் தமிழ் தேசியமும் தான் கழகத்தின் இரண்டு கண்கள் எனவும், பிளவுபாடு மற்றும் ஊழலே நம் எதிரிகள் எனவும் கூறியிருந்தார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு ஆகஸ்ட் 25-இல் மதுரையில் நடைபெறும்
