2024-ஆம் ஆண்டில் உலக இயற்கை எரிவாயு நுகர்வு அளவு 4 லட்சத்து 21 ஆயிரம் 200 கோடி கன மீட்டரை எட்டி, வரலாற்றில் மிக அதிகமாக பதிவாகியுள்ளது என்று சர்வதேச எரியாற்றல் நிறுவனம் 21ஆம் நாள் அறிவித்தது.
புள்ளிவிவரங்களின் படி, 2024ஆம் ஆண்டில் உலக புதிய எரிசக்தி தேவையில் இயற்கை எரிவாயு சுமார் 40 சதவீதம் ஆகும். சாலை போக்குவரத்து, மின் உற்பத்தி முதலிய துறைகளில் இயற்கை எரிவாயு தொடர்ந்து எண்ணெய் மற்றும் பெட்ரோ வேதியியல் பொருட்களுக்கு ஈடாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
2025-ஆம் ஆண்டில் உலகில் இயற்கை எரிவாயு தேவை மேலும் அதிகரிக்கும் என்று சர்வதேச எரியாற்றல் நிறுவனம் மதிப்பிட்டுள்ளது.