அமெரிக்க அரசு செயல்படுத்தி வரும் சுங்க வரிக் கொள்கை, உண்மையில் உள்நாட்டு மக்கள் மீது சுமத்தப்படும் கூடுதல் வரி சுமையாகும். சுங்க வரி மூலம் அமெரிக்க அரசுக்கு கிடைக்கும் வருவாய் இறுதியில் அமெரிக்காவின் நுகர்வோரால் செலுத்தப்படும் வரித் தொகை என்று அமெரிக்காவின் பல செய்தி ஊடகங்கள் விமர்சித்துள்ளன.
அமெரிக்காவின் தேசிய பொது வானொலி நிறுவனம் 16ஆம் நாளன்று தனது நிகழ்ச்சியில் கூறுகையில், வெளிநாடுகள் மீது அமெரிக்க அரசு கூடுதலான சுங்க வரி விதிப்பது உண்மையில் அமெரிக்க மக்கள் மீது சுமத்தப்படும் வரிச் சுமை என்று சுட்டிக்காட்டியது.
அமெரிக்க சிந்தனைக் குழுவான வரி நிதியமானது, சுங்க வரி விதிப்பால் ஏற்பட்ட விலை உயர்வுகளால் இவ்வாண்டில் அமெரிக்காவின் சாரசரி குடும்பத்திற்கு 1300 டாலர் செலவிடும். அடுத்த ஆண்டில், இந்த செலவு 1700 டாலராக அதிகரிக்கும் என்று கணித்துள்ளது.
மேலும், அமெரிக்க வணிக இதழான ஃபார்ச்சூன் 17ஆம் நாள் மோர்கன் ஸ்டானிஸ் நிறுவனத்தின் ஆய்வு அறிக்கையை மேற்கோள்காட்டி, அமெரிக்காவின் சுங்க வரி விகிதம் தொடர்ந்து உயர்ந்து, உயர் மட்டத்தில் அதைப் பராமரிக்கக் கூடும் என்றும், வரும் 10 ஆண்டுகளில், அமெரிக்க அரசு 2.7 லட்சம் கோடி டாலர் சுங்க வரி வசூலிக்க கூடும். இந்த வரிச் சுமையை அமெரிக்க நுகர்வோர் சுமத்துவதாகவும் தெரிவித்தது.