சீன விஞ்ஞானி ஜிலியாங் ஜின் தலைமையிலான குழுவினர் நிலவின் மேற்பரப்பை பற்றி ஆய்வு மேற்கொண்டனர். அந்த ஆய்வில் நிலவுக்கும், பூமிக்கும் இடையே உள்ள ஆழ்ந்த தொடர்பை பற்றி அவர்கள் புரிந்து கொள்ள உதவியது.
அதுபற்றி அவர்கள் வெளியிட்ட அறிக்கையில், நிலவுக்கு கெட்ட நிகழ்வு ஒன்று நடந்து வருகிறது. நிலவின் மேற்பரப்பில், அதிலும் துருவ பகுதிகளில் ஹெமடைட் என்ற ரசாயனம் இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.
இது ஒரு வகையான இரும்பு ஆக்சைடு ஆகும். நிலவு துருப்பிடிக்கிறது என ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதற்கு ஆக்சிஜன் மற்றும் தண்ணீர் தேவை. ஆனால், இவையிரண்டும் நிலவில் அதிகளவில் கிடையாது. அப்படியென்றால் இதற்கு அடிப்படையாக என்ன இருக்கும்?
இதற்கான விடையை அவர்கள் அந்த அறிக்கையில் அளித்துள்ளனர். இந்த துருப்பிடித்தலுக்கு பூமியே காரணம். பூமியின் வளி மண்டலத்தில் இருந்து காற்றானது நிலவுக்கு பயணித்து இருக்கும் என்பது விஞ்ஞானிகளின் நம்பிக்கை.
இதனை அவர்கள் ஆய்வகத்தில் செயற்கையான முறையில் பரிசோதனை செய்து கண்டறிந்து உள்ளனர். இந்தியாவின் சந்திரயான்-1 திட்டத்தின்போது, நிலவின் துருவ பகுதிகளில் ஹெமடைட் இருந்தது என கண்டறியப்பட்டது.
இதனை விஞ்ஞானிகள் முன்பே அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தனர். இந்த துருப்பிடித்தலை புரிந்து கொள்வதன் வழியே வருங்கால நிலவு தொடர்பான திட்டங்களில் அது தாக்கம் ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சீன ஊடகக் குழுமத்தின் 2026ஆம் ஆண்டு வசந்த விழாவுக்கான கலை நிகழ்ச்சியின் 2ஆவது ஒத்திகை ஜனவரி 25ஆம் நாள் நிறைவேற்றியது. அனைத்து நிகழ்ச்சிகளும் சீராகவும் [மேலும்…]
செங்கோட்டையன் அதிமுகவில் ஒற்றுமைக்காக தான் வலியுறுத்தினார். ஆனால் இன்றைக்கு அது நடந்து கொண்டுதான் இருக்கிறது என அதிமுக முன்னாள் எம்பி கே.சி.பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக [மேலும்…]
நாம் தமிழர் கட்சியினர் புகாரின் அடிப்படையில் தேனி காவல் நிலையத்தில் தவெக மாவட்ட செயலாளர் மீது கொலை மிரட்டல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழக வெற்றிக் [மேலும்…]
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தை தெப்பத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். இதில் சித்திரை, [மேலும்…]
ஐநா மனித உரிமைகள் கவுன்சிலின் 39 வது சிறப்பு அமர்வில், ஈரானில் நடைபெற்று வரும் போராட்டங்களை ஒடுக்குவதற்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை இந்தியா [மேலும்…]
அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப், கனடா நாடு சீனாவுடன் புதிய வர்த்தக ஒப்பந்தம் மேற்கொண்டால், கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்துப் பொருட்கள் மீதும் 100 [மேலும்…]
கடந்த சில நாட்களில் உலக நாடுகள் சீனாவுடன் அடிக்கடி பேச்சுவார்த்தை நடத்துகின்றது. உலகின் 2ஆவது பொருளாதார நாடான சீனாவுடன் மேலதிகமான நாடுகள் பேச்சுவார்த்தை மேற்கொள்ள [மேலும்…]