14ஆவது சீனத் தேசிய மக்கள் பேரவை நிரந்தர கமிட்டியின் 14ஆவது கூட்டம் 25ம் நாள் காலை பெய்ஜிங் மக்கள் மாமண்டபத்தில் நிறைவடைந்தது. நிரந்தர கமிட்டியின் தலைவர் ச்சாவ் லே ஜி இக்கூட்டத்துக்குத் தலைமை தாங்கினார்.
நிரந்தர கமிட்டியின் 161 உறுப்பினர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். இந்த எண்ணிக்கை சட்டப்பூர்வமாகும்.
சீனத் தேசிய மக்கள் பேரவை நிரந்தர கமிட்டியின் பணியறிக்கை இக்கூட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. ச்சாவ் லே ஜி, நிரந்தர கமிட்டியின் சார்பில், 14வது சீனத் தேசிய மக்கள் பேரவையின் 3வது கூட்டத் தொடரில் பணி அறிக்கை வழங்குவது என்பது சீனத் தேசிய மக்கள் பேரவை நிரந்தர கமிட்டி தலைவர்கள் கூட்டத்தில் பரிந்துரை செய்யப்பட்டது.
நிறைவு கூட்டம் நடைபெற்ற பிறகு, 14ஆவது சீனத் தேசிய மக்கள் பேரவை நிரந்தர கமிட்டி, 15வது சிறப்பு பரப்புரையை நடத்தியது. ச்சாவ் லே ஜி இதற்குத் தலைமை தாங்கினார்.