இதுவரை சீனா நாடளவில் உடல் உறுப்புகளைத் தானமாக வழங்க பதிவு செய்த மக்களின் எண்ணிக்கை 70லட்சத்து 50ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.
உடல் உறுப்பு, பூதவுடல் மற்றும் கார்னியாவின் கொடை மூலம், 1லட்சத்து 70ஆயிரத்துக்கும் அதிகமான உறுப்பு செயலிழப்பு நோயாளிகளின் உயிர் மீட்கப்பட்டுள்ளது. ஒரு லட்சத்துக்கு அதிகமான பார்வையற்றவர்களுக்கு மீண்டும் வெளிச்சம் தந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஒவ்வொரு ஆண்டின் சிங்மின் திருவிழாவின் போது, சீனாவின் பல்வேறு இடங்களிலுள்ள செஞ்சிலுவைச் சங்கங்கள் விதவிதமான வழிமுறைகளில் நினைவு நடவடிக்கைகளை நடத்தி உடல் உறுப்புத் தானத்தின் அன்பு மிக்க லட்சியத்தில் மேலதிக மக்கள் ஈடுபட வேண்டுகோள் விடுத்துள்ளன.